- செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே - எங்கள் ( செந்தமிழ்....)
- வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல காதல் புரியும் அரம்பையர் போலிளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு. ( செந்தமிழ்...)
- காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வையை பொருனைநதி - யெனமேவிய யாறு பலவோடத் - திரு மேனி செழித்த தமிழ்நாடு. (செந்தமிழ்...)
- முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம் எத்தனை யுண்டு புவி மீதே - அவை யாவும் படைத்த தமிழ் நாடு. (செந்தமிழ்....)
- நீலத் திரைக்கடல் லோரத்திலே - நின்று நித்தந் தவஞ்செய் குமரியெல்லை - வடமாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு. (செந்தமிழ்....)
- கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல பல்வித மாயின சாத்திரத்தின் - மணம்பாரெங்கும் வீசும் தமிழ்நாடு. (செந்தமிழ்...)
- வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார மென்றோர் -மணி யாரம் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்..)
- சிங்களம் புட்பகம் சாவக - மாதிய தீவு பலவினுஞ் சென்றேறி - அங்குத் தங்கள் புலிக்கொடி மீன்கொடி யும்நின்று சால்புறக் கண்டவர் தாய்நாடு. (செந்தமிழ்..)
- விண்ணை யிடிக்கும் தலையிமையம் - எனும் வெற்பை யிடிக்கும் திறனுடையார் - சமர் பண்ணிக் கலிங்கத் திருள் கொடுத்தார் தமிழ்ப் பார்த்திவர் நின்ற தமிழ் நாடு. (செந்தமிழ்...)
- சீன மிசிரம் யவனரகம் - இன்னும் தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை ஞானம் படைத்தொழில் வாணிபமும் - மிக நன்று வளர்த்த தமிழ்நாடு. (செந்தமிழ்..)