head

head

Sunday, December 29, 2013

யோக சித்தி

1.விண்ணும் மண்ணுந்தனி யாளும் - எங்கள் வீரை சத்தி நினதருளே - என்றன் கண்ணுங் கருத்துமெனக் கொண்டு - அன்பு கசிந்து கசிந்து கசிந்துருகி - நான் பண்ணும் பூசனைகளெல்லாம் - வெறும் பாலை வனத்திலிட்ட நீரோ? - உனக் கெண்னுஞ் சிந்தை யென் நிலையோ - அறி வில்லா தகிலமளிப் பாயோ ? 2.நீயே சரணமென்று கூவி - என்றன் நெஞ்சிற் பேருறுதி கொண்டு - அடி தாயே யெனக்கு மிக நிதியும் - அறந் தன்னைக் காக்குமொரு திறனும் - தரு வாயோ யென்று பணிந் தேத்திப் - பல வாறா நினது புகழ் பாடி - வாய் ஓயே னாவது துணராயோ ? - நின துண்மை தவறுவதோ ரழகோ ? 3.காளீ வளிய சாமுண்டி - ஓங் காரத் தலைவி யென்னி ராணி - பல நாளிங் கெனை யலைக்க லாமோ? - உள்ளம் நாடும் பொருளடைதற் கன்றோ - மலர்த் தாளில் விழுந்த பயங் கேட்டேன் - அது தாரா யெனிலுயிரைத் தீராய் - துன்பம் நீளி லுயிர் தரிக்க மாட்டேன் - கரு நீலி யென்னியல்பறி யாயோ?

Thursday, September 27, 2012

செந்தமிழ் நாடு

  • செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே - எங்கள்     ( செந்தமிழ்....)

  • வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல காதல் புரியும் அரம்பையர் போலிளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு.                   ( செந்தமிழ்...)

  • காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வையை பொருனைநதி - யெனமேவிய யாறு பலவோடத் - திரு மேனி செழித்த தமிழ்நாடு.                      (செந்தமிழ்...)

  • முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம் எத்தனை யுண்டு புவி மீதே - அவை யாவும் படைத்த தமிழ் நாடு.                  (செந்தமிழ்....)

  • நீலத் திரைக்கடல் லோரத்திலே - நின்று நித்தந் தவஞ்செய் குமரியெல்லை - வடமாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு.                  (செந்தமிழ்....)

  • கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல பல்வித மாயின சாத்திரத்தின் - மணம்பாரெங்கும் வீசும் தமிழ்நாடு.                  (செந்தமிழ்...) 

  • வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார மென்றோர் -மணி யாரம் படைத்த தமிழ்நாடு.                      (செந்தமிழ்..)

  • சிங்களம் புட்பகம் சாவக - மாதிய தீவு பலவினுஞ் சென்றேறி - அங்குத் தங்கள் புலிக்கொடி மீன்கொடி யும்நின்று சால்புறக் கண்டவர் தாய்நாடு.                 (செந்தமிழ்..)

  • விண்ணை யிடிக்கும் தலையிமையம் - எனும் வெற்பை யிடிக்கும் திறனுடையார் - சமர் பண்ணிக் கலிங்கத் திருள் கொடுத்தார் தமிழ்ப் பார்த்திவர் நின்ற தமிழ் நாடு.                  (செந்தமிழ்...) 

  • சீன மிசிரம் யவனரகம் - இன்னும் தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை ஞானம் படைத்தொழில் வாணிபமும் - மிக நன்று வளர்த்த தமிழ்நாடு.                       (செந்தமிழ்..)