head
Sunday, December 29, 2013
யோக சித்தி
1.விண்ணும் மண்ணுந்தனி யாளும் - எங்கள்
வீரை சத்தி நினதருளே - என்றன்
கண்ணுங் கருத்துமெனக் கொண்டு - அன்பு
கசிந்து கசிந்து கசிந்துருகி - நான்
பண்ணும் பூசனைகளெல்லாம் - வெறும்
பாலை வனத்திலிட்ட நீரோ? - உனக்
கெண்னுஞ் சிந்தை யென் நிலையோ - அறி
வில்லா தகிலமளிப் பாயோ ?
2.நீயே சரணமென்று கூவி - என்றன்
நெஞ்சிற் பேருறுதி கொண்டு - அடி
தாயே யெனக்கு மிக நிதியும் - அறந்
தன்னைக் காக்குமொரு திறனும் - தரு
வாயோ யென்று பணிந் தேத்திப் - பல
வாறா நினது புகழ் பாடி - வாய்
ஓயே னாவது துணராயோ ? - நின
துண்மை தவறுவதோ ரழகோ ?
3.காளீ வளிய சாமுண்டி - ஓங்
காரத் தலைவி யென்னி ராணி - பல
நாளிங் கெனை யலைக்க லாமோ? - உள்ளம்
நாடும் பொருளடைதற் கன்றோ - மலர்த்
தாளில் விழுந்த பயங் கேட்டேன் - அது
தாரா யெனிலுயிரைத் தீராய் - துன்பம்
நீளி லுயிர் தரிக்க மாட்டேன் - கரு
நீலி யென்னியல்பறி யாயோ?
1.விண்ணும் மண்ணுந்தனி யாளும் - எங்கள்
வீரை சத்தி நினதருளே - என்றன்
கண்ணுங் கருத்துமெனக் கொண்டு - அன்பு
கசிந்து கசிந்து கசிந்துருகி - நான்
பண்ணும் பூசனைகளெல்லாம் - வெறும்
பாலை வனத்திலிட்ட நீரோ? - உனக்
கெண்னுஞ் சிந்தை யென் நிலையோ - அறி
வில்லா தகிலமளிப் பாயோ ?
2.நீயே சரணமென்று கூவி - என்றன்
நெஞ்சிற் பேருறுதி கொண்டு - அடி
தாயே யெனக்கு மிக நிதியும் - அறந்
தன்னைக் காக்குமொரு திறனும் - தரு
வாயோ யென்று பணிந் தேத்திப் - பல
வாறா நினது புகழ் பாடி - வாய்
ஓயே னாவது துணராயோ ? - நின
துண்மை தவறுவதோ ரழகோ ?
3.காளீ வளிய சாமுண்டி - ஓங்
காரத் தலைவி யென்னி ராணி - பல
நாளிங் கெனை யலைக்க லாமோ? - உள்ளம்
நாடும் பொருளடைதற் கன்றோ - மலர்த்
தாளில் விழுந்த பயங் கேட்டேன் - அது
தாரா யெனிலுயிரைத் தீராய் - துன்பம்
நீளி லுயிர் தரிக்க மாட்டேன் - கரு
நீலி யென்னியல்பறி யாயோ?
Labels:
bharathy
,
bharathykavithaikal
,
Subramanya Bharathi
,
பாரதி கவிதைகள்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment